உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் நிலக்கரி சிதறியதால் பைக் கவிழ்ந்து 5 பேர் காயம்

சாலையில் நிலக்கரி சிதறியதால் பைக் கவிழ்ந்து 5 பேர் காயம்

காரைக்கால் : காரைக்காலில் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிச் செல்லும் நிலக்கரி சாலையில் சிதறியதால், ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் தனியார் துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கப்பலில் வரும் நிலக்கரியை ரயில் மற்றும் லாரிகள் மூலம் தமிழகப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது.லாரிகளில் அளவுக்கு அதிகமாக நிலக்கரியை ஏற்றிச் செல்வதால், சாலை நெடுகிலும் நிலக்கரி சிந்தி சிதறிக்கிடக்கின்றன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இந்நிலையில் சிதறிக்கிடந்த நிலக்கரியில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சறுக்கி விழுந்ததில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்த சி.சிடி.வி., கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்