உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு அம்பேத்கர் தெருவை சேரந்தவர் முத்தமிழ்செல்வன், 40; வெல்டிங் வேலை செய்கிறார். இவரது மனைவி ஷீலாமேரி 26; இவர் கடந்த 28ம் தேதி, தனது உறவினர்களான கார்த்தி 26; வினிதராம் 25; ஜான்சன் 27; சதிஷ்குமார் 28; காவியா 25; சர்மா 25; ஆகியோருடன், கிருமாம்பாக்கம் அருகே உள்ள மணப்பட்டு பல்மைரா கடற்கரைக்கு ஆட்டோவில் (டி.என்.31 சிபி 6586) சென்றனர். ஆட்டோவை நெல்லிக்குப்பம் கோபி ஓட்டினார்.கடற்கரை சாலையில் வளைவு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து குறித்து ஷீலா மேரியின் கணவர் முத்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை