உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 

சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 

பாகூர்: மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் அடுத்துள்ள சோரி யாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் வெங்கடேஸ்வரன் 16; இவர் தனது நண்பர் ஹரிஷ்மனோ உள்ளிட்டோருடன், குருவி நத்தம் அரசு பள்ளி மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சோரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஷ் விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ்மனோவை அழைத்து பேசிக் கொண்டிருந்தார். வெங்கடேஸ்வரன், ஏன் விளையாடாமல் பேசிக் கொண்டிருக்கிறாய், வந்து விளையாடு என்று ஹரிஷ் மனோவை அழைத்துள்ளார்.இதனால், ஜெகதீஷிக்கும், வெங்கடேஸ்வரனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜெகதீஷ் அருகில் இருந்த கல்லை எடுத்து வெங்கடேஸ்வரன் தாக்கினார்.உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில், பாகூர் போலீசார், ஜெகதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை