உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அபயம் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணம் வழங்கல்

அபயம் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணம் வழங்கல்

புதுச்சேரி : அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.முதலியார்பேட்டையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அபயம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனம், கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் தமிழ்ச்செல்வி என்ற மாணவிக்கு, கல்வியாண்டிற்கான நோட்டு, எழுது பொருட்கள், கல்வி உபகரணங்கள் அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் சம்பத் எம்.எல்.ஏ., வழங்கினார். அபயம் தொண்டு நிறுவன நிறுவனர் சுந்தரமுருகன், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைய வாழ்த்து கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை