உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்களை திசை திருப்பும் செயலில் பா.ஜ., தலைவர்கள் காங்., ஆனந்த்பாபு குற்றச்சாட்டு

மக்களை திசை திருப்பும் செயலில் பா.ஜ., தலைவர்கள் காங்., ஆனந்த்பாபு குற்றச்சாட்டு

புதுச்சேரி, : மக்களை பிளவுபடுத் தும் செயலை பா.ஜ., தலை வர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:பார்லிமென்ட்டில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பேசியது பற்றி, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி முற்றிலும் திரித்து சொல்ல முயல்கிறார். ராகுல், தனது உரையில், 20,க்கும் மேற்பட்ட விஷயங்களை குறிப்பிட்டார். அவர்கேட்ட எந்த கேள்விக்கும் அப்போது யாரும் பதில் அளிக்கவில்லை.இந்தாண்டு நடத்தப்பட்ட 'நீட்' முறைகேட்டால், 2, லட்சத்திற்கும் மேற்பட்டமாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.இதனை, நாடு முழுவதும் பா.ஜ., தலைவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.இதில் ஒரு பகுதியாக, எம்.எல்.ஏ., அசோக்பாபு, சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.இதுபோன்ற செயல்களை, செல்வகணபதி, அசோக் பாபு ஆகிய இருவரும், நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை