உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புளு ஸ்டார் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புளு ஸ்டார் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் 198 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிகிதா 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஹேமலதா 573 பெற்று இரண்டாம் இடத்தையும், ஹேமவினோதினி 567 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 501 முதல் 550 வரை 34 மாணவர்களும், 451 முதல் 500 வரை 59 பேரும், 401 முதல் 450 வரை 53 பேரும், 350 முதல் 400 வரை 27 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் பாட வாரியாக வணிகவியலில் ஒருவரும் கணினி அறிவியலில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று உள்ளனர்.பாட வாரியாக தமிழில் 5 பேர், பிரெஞ்சு 2 பேர், இயற்பியல் மற்றும் கணிதம் தலா ஒரு மாணவர், கணினி அறிவியல் 8 பேர் , கணித பயன்பாடு 2 பேர், கணக்கு பதிவியல் மற்றும் பொருளியல் தலா ஒருவர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவசெல்வம், நிர்வாக அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை