உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு

கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு

புதுச்சேரி: மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், கர்மயோகி பாரத் திட்டத்தில் நிர்வாகத்திலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்து விளங்கும் மூன்று நிறுவனங்களின் ஒன்றாக ஜிப்மர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.டில்லியில் நடந்த தேசிய சுகாதாரம் குடும்ப நல அமைச்சகத்தில் அண்மையில் நடந்த கூட்டத்தில் இதற்கான பாராட்டு ஜிப்மர் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஜிப்மர் கர்மயோகி பாரத் திட்டத்தின் நோடல் அதிகாரி ஹவா சிங், ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி, திறன் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்டார்.எதிர்காலத்தில் ஜிப்மர், பாடநெறி வழங்கும் நிறுவனமாக மாறுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். கர்மயோகி திட்டம் என்பது பொது சேவைகளில் திறன் மேம்பாட்டிற்கான தேசிய திட்டமாகும். இது இந்திய நெறிமுறைகளில் திறமையான பொது சேவையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.அரசுடன் குடிமக்களின் தொடர்புகளை மேம்படுத்துவது, குடிமக்கள் மற்றும் வணிகத்திற்கான உதவியாளர்களாக மாறுவது, களத்திறனை மேம்படுத்தப்படுகின்றது. கர்மயோகி பாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஊழியர்களை இயக்குனர் ராகேஷ் அகர்வால் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை