உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் கொள்ளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை

மணல் கொள்ளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை

பாகூர்: மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக, சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.பாகூர் தென்பெண்ணையாறு, நெட்டப்பாக்கம் மலட்டாறு பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. ஆற்று படுகையையொட்டி உள்ள விளை நிலங்களில் இருந்தும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பாதிக்கின்றனர். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,வில்லியனுார் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தில்மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் சோம சேகர் அப்பால் கொட்டாரு தலைமை தாங்கினார். பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள ஆற்று படுகை மற்றும் வயல்வெளி பகுதியில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுப்பது, மணல் கொள்ளையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை