உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் பணிக்கு வந்த ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தேர்தல் பணிக்கு வந்த ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வந்த அரசு ஊழியர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களான லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் உள்ள 967 ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை முதல் ஓட்டுப்பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தேர்தல் பணி ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் லாஸ்பேட்டை அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்திற்கு வந்தனர். காலை 11:00 மணிக்கு, 6வது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கீழ் உள்ள பணிக்கு வந்த பல்நோக்கு ஊழியர் பச்சையப்பன், 50; திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஊழியர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். அங்கிருந்த டாக்டர் பச்சையப்பனை பரிசோதித்து, தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை