உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழு புதுச்சேரியில் துவக்கம்

ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழு புதுச்சேரியில் துவக்கம்

புதுச்சேரி, : புதுச்சேரியில், தேசிய ஊழல் எதிர்ப்பு மற்றும் செயல்பாட்டு குழுவின் துவக்க விழா நடந்தது.செண்பகா ேஹாட்டலில் நடந்த விழாவிற்கு, ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழுவின் தேசிய தலைவர் ராஜேஷ் சுக்லா தலைமை தாங்கி, குழுவை துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநில தலைவரும், ஆல்பா கல்விக் குழும நிறுவனருமான பாஷிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். விழாவில், தேசிய தலைவர் ராஜேஷ் சுக்லா பேசுகையில், 'ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குறித்த புகார் வந்தால், ஊழல் நடப்பது தெரிய வந்தால் உடனே உறுப்பினர்கள் அதனை தடுக்க வேண்டும்' என்றார்.குழுவின் புதுச்சேரி தலைவர் பாஷிங்கம் பேசுகையில், 'ஊழல் நாட்டுக்கு கேடு. ஊழல் தடுப்பை நம் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு முதலில் இதனை கற்றுத்தர வேண்டும். ஊழலை நாம் தடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும்' என்றார்.விழாவில் நிர்வாகிகள் செல்வம், ஓம்பிரகாஷ் போர்வால், டாக்டர் நவீன்தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை