உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம், தேசிய வன்முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று, துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. அவர் உறுதிமொழி வாசிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்வில் முதுநிலை கணக்கு அதிகாரி ஸ்ரீதரன், கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன், கதிரவன் மற்றும் நல அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !