உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் 209 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜிப்மரில் 209 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி : ஜிப்மரில் 154 செவிலியர் அதிகாரி உட்பட 209 இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், குரூப் பி பிரிவில் நர்சிங் அதிகாரி பதவி 154 இடங்கள் உட்பட 169 இடங்களும், குரூப் சி பிரிவில் 24 இளநிலை உதவியாளர் உட்பட 40 பணியிடங்கள் என, மொத்தம் 209 பணியிடங்கள் நிரப்பட உள்ளது.இந்த பணியிடங்களுக்கு, ஜிப்மரின் www.jipmer.edu.inஇணையதளம் மூலம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி தேதி மாலை 4:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு செப்., 14ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்செப்., 2ம் தேதி முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் நிர்வாக குழு முடிவின்படி, செவிலியர் அதிகாரி பதவிக்கு 80 சதவீத இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை