| ADDED : ஜூன் 09, 2024 03:53 AM
புதுச்சேரி : பி.ஆர்க்., படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பம் பெறப் பட்டது. நாளை 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் பி.ஆர்க்., எனப்படும் இளநிலை கட்டடவியல் பொறியியல் படிப்பிற்கு நேற்று முதல் சென்டாக்கின் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகிறது. வரும் 22ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பத்தினை சமர்பிக்கலாம்.பி.ஆர்க்., படிப்பில் சேர தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு (நாடா) அல்லது ஜே.இ.இ.,ஸ்கோர் மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள், புதிய மாணவர்கள் நாடா, ஜே.இ.இ., தேர்ச்சி தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.