| ADDED : மே 13, 2024 04:59 AM
பாகூர்: பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்துள்ள சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் 42; பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த தென்னவன் 22; என்பவர் பைக்கில் வேகமாக வந்து ஆட்டின் மீது மோதி உள்ளார். இதில், ஆட்டின் கால் உடைந்து வலியால் துடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், தென்னவனை கண்டித்துள்ளார்.அப்போது, அங்கு வந்த தென்னவனின் தந்தை தெய்வசிகாமணி, சக்திவேலை பார்த்து நீ என்னடா எனது மகனை கேள்வி கேட்கிறாய் என ஆபாசமாக திட்டி, கையால் தாக்கி உள்ளார். உடனே, தென்னவன் சாலையோரம் கிடந்த மரக்கட்டையை எடுத்து, சக்திவேலை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில், படுகாயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சக்கிவேல் புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தெய்வசிகாமணி, அவரது மகன் தென்னவனை தேடி வருகிறார்.