உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்ளை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சீதா தலைமை தாங்கி, பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.தலைமை ஆசிரியர் விஜயகணேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை கணித ஆசிரியர் அமுதா தொகுத்து வழங்கினார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆங்கில விரிவுரையாளர் சிவசங்கரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை