உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை தின விழாவில் மாணவர்களுக்கு விருது

பல்கலை தின விழாவில் மாணவர்களுக்கு விருது

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில், மாணவர் களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், 'பல்கலைக்கழக தின விழா - 2024' நேற்று நடந்தது. விழாவில், மாணவர்கள் பிரிவு டீன் ஞானோ புளோரன்ஸ் சுதா வரவேற்றார்.இணை வேந்தர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.துணைவேந்தர் மோகன் தலைமை உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இருவரும், மாணவர்களுக்கு தகுதி விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினர். விழாவில், முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள், பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, மாணவர் பேரவை மேற்கொண்டது. மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பூபாலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ