உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா

வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா

புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் உள்ள அலர்மேல் மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை மாகோற்சவ திருப்பணி தொடக்க விழா நேற்று பூஜையுடன் துவங்கியது.அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து ஹோமம் நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு முதல் கால ஹோமம், மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமம், 10:00 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு, 10:30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டை சாற்றுமுறை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை