| ADDED : ஜூன் 02, 2024 04:54 AM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் துாய்மை படுத்தும் பணியினை எஸ்.பி., பாஸ்கரன் துவக்கி வைத்தார்.பிளாஸ்டிக்ஸ் பார் சேஞ்ச் பிளாஸ்டிக் (மறுசுழற்சி) நிறுவனம் சார்பில், கார்னியர் இந்தியாவுடன் இணைந்து, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் எட்டு இடங்களில் துாய்மை பிரசாரத்தை தொடங்கியது.புதுச்சேரியில் ராக் கடற்கரையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். துாய்மை பணியை சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் துவக்கி வைத்தார். இணைய வழி காவல் துறை ஆய்வாளர் கீர்த்தி மற்றும் இணையவழி போலீசார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கடற்கரை மற்றும் கடற்கரை சாலைகளை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் செய்திருந்தார்.