உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளி மாணவர் விஜயராமன் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணக்கு 99, அறிவியல் 98, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி ஸ்ரீமதி 491 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இவர் கணிதம், அறிவியல் பாடத்தில் 100க்கு 100 பெற்றார். மாணவி ஓவியா 489 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். பாட வாரியாக தமிழில் 31 பேர், ஆங்கிலத்தில் 23 பேர், கணிதம் 15 பேர், அறிவியல் 12 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 11 பேர் 91 முதல் 98 வரை மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 450க்கு மேல் 17 பேர், 400 முதல் 450 மதிப்பெண்கள் வரை 18 பேர், 350 முதல் 400 வரை 32 பேர், 300 முதல் 350 மதிப்பெண்கள் வரை 21 பேர் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி தாளாளர் மெய்வழிரவிக்குமார், பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவ செல்வம் மற்றும் நிர்வாக அலுவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.தேர்வில் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தாளாளர் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை