உள்ளூர் செய்திகள்

ஆலப்புழா போகலாமா?

புதுச்சேரியில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவிற்கு செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது. ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரயில் மூலம் செல்ல முடியும்.தினமும் மதியம் 12:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 2:57 மணிக்கு ஆலப்புழா ரயில் நிலையம் சென்றடைகிறது. அதுபோல, ஆலப்புழாவில் இருந்து தினசரி அதிகாலை 2:20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், மாலை 5:35 மணிக்கு விழுப்புரம் வருகிறது. இதுதவிர, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவிற்கு தினசரி கல்லாடா ஆம்னி பஸ் இரவு 9:00 மணி மற்றும் 9:30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி