உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் அட்மிஷன் கமிட்டி நியமனம்

சென்டாக் அட்மிஷன் கமிட்டி நியமனம்

புதுச்சேரி, : சென்டாக் அட்மிஷன் ஒருங்கிருங்கிணைப்பாளராக உயர் கல்வி துறை இயக்குனர் அமன்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையை கவனிக்க கல்வித் துறை செயலரை சேர்மனாக கொண்டு சென்டாக் கமிட்டி ஏற்பட்டுள்ளது. சுகாதார துறை செயலர் துணை சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார துறை இயக்குனர், உயர் கல்வி துறை இயக்குனர், பள்ளி கல்வித் துறை இயக்குனர், சுகாதார துறை சார்பு செயலர், உயர் கல்வித் துறை சார்பு செயலர், அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். சென்டாக் கன்வீனர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சென்டாக் அட்மிஷன் ஒருங்கிருங்கிணைப்பாளராக உயர் கல்வி துறை இயக்குனர் அமன்சர்மா, கன்வீனராக ராஜிவ்காந்தி கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை உயர்கல்வி துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை