உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய ஐ.ஐ.டி., குழு புதுச்சேரி வருகை

மத்திய ஐ.ஐ.டி., குழு புதுச்சேரி வருகை

புதுச்சேரி: விஷவாயு பரவியது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., குழு புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட மூவர் இறந்தனர். இந்த விஷ வாயு எப்படி பாதாள சாக்கடையில் உருவாகி பரவியது என்பதை கண்டறிய முடியவில்லை. இதனால் புதுச்சேரி அரசு ஐ.ஐ.டி மற்றும் வாப்ஸ் (மத்திய நீர் ஆராய்ச்சி நிறுவனம்) குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் விரைவில் புதுச்சேரி வந்து ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை