உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி தேர் திருவிழா

திருக்காமீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி தேர் திருவிழா

வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி நடக்கும் தேரோட்டத்தை கவர்னர் வடம்பிடித்து துவக்கி வைக்கிறார்.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 13ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி வரை நடைபெறும் விழாவில் காலையில் சிறப்பு அபிேஷகம், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது.16ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி, நேற்று காலை சுவாமி மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து பகல் நாயன்மார்கள் வீதியுலா நிகழ்ச்சி, இரவு ரிஷபம், மயில், வெள்ளி யானை வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா நடந்தது. நாளை (20ம் தேதி) மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.முக்கிய விழாவான தேர் திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது. காலை 7:40 மணியளவில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று, தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி, சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி