மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
18 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
18 hour(s) ago
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.அரியாங்குப்பத்தில் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் 110ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் காலை பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். விழாவில், சபாநாயகர் செல்வம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து முக்கிய வீதிகளில் வழியாக தேர் சென்று, நிலையை அடைந்தது. மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
18 hour(s) ago
18 hour(s) ago