| ADDED : ஏப் 27, 2024 04:34 AM
புதுச்சேரி : மூலக்குளம் கிறிஸ்ட் பொறியில் கல்லுாரியில் 17வது ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.புதுச்சேரி மூலக்குளத்தில் இயங்கி வரும் கிறிஸ்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் 17வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி மேலாண் இயக்குநர் சாம் பால் வழிகாட்டுதல்படி நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார், சாம் பால் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கி, ஆண்டு இதழினை வெளியிட்டனர். முதன்மை விருந்தினர் சினிமா நடிகர் சதிஷ் பெற்றுக் கொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக 'டிவி' நடிகர்கள் அசார், டி.எஸ்.கே., கலந்து கொண்டு பேசினர். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் கல்லுாரி ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் 2022--23ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அளவிலும், கல்லுாரி அளவிலும் முதல் இடம் பிடித்த மாணவர்கள், அதிக தேர்ச்சி சதவீதம் கொடுத்த பேராசிரியர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், சாம் பால் கல்வி அறக்கட்டளைக் குழுமத்தின் அனைத்துக் கல்லுாரி மற்றும் பள்ளி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இணைப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.