உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி.ஜி.பி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

டி.ஜி.பி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

புதுச்சேரி : காரைக்காலில் 20 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து வழக்குப் பதிவு செய்யாத டி.ஆர்.பட்டினம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள மனு;காரைக்காலில் 20 லட்சம் ரூபாய் திருடு போன சம்பவம் நடந்து 9 மாதங்கள் மேலாகியும் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் காவல்நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறைத் தலைமையும் இதில் தலையிட்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்ய வேண்டும். திருடு போன 20 லட்சம் ரூபாயை மீட்க வேண்டும். மேலும், வழக்குப் பதியாத டி.ஆர்.பட்டினம் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ