மேலும் செய்திகள்
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
8 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
8 hour(s) ago
முதலியார்பேட்டையில் வாய்க்கால் பணி துவக்கம்
8 hour(s) ago
புதுச்சேரி: கடற்கரை மண்டல மேலாண்மை மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வலியுறுத்தி, அனைத்து மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள்,அனைத்து மீனவர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.சுதேசி மில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீராம்பட்டிணம்,வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். அனைத்து மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். மீனவ அமைப்பு தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, நாளை 22ம் தேதி நடக்க இருக்கும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 12 கடல் மைல் துாரம் வரையில் மீன்பிடி தொழில் மட்டுமே செய்யும் இடங்கள் என தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.மேலும் மீனவ கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு கூடங்கள், மீன்வளத்துறை கட்டி கொடுத்துள்ள வலை பின்னும் கூடம், மீன் காய வைக்கும் மேடைகள், மீனவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், எழுத்து பூர்வமாக திட்டத்துடன் வரைபடத்தை வெளியிட வேண்டும். மீனவ கிராமங்கள் சார்பில் வழங்கப்பட்ட வரைபடங்களையும் முழுமையாக ஏற்று, அவற்றை இடம் பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago