உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதார துறையின் பணிகள் 2 சார்பு செயலர்களிடம் பகிர்ந்தளிப்பு

சுகாதார துறையின் பணிகள் 2 சார்பு செயலர்களிடம் பகிர்ந்தளிப்பு

புதுச்சேரி: சுகாதார துறையின் பணிகளை இரண்டு சார்பு செயலர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசின் சுகாதார துறை, மக்களின் நல்வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது. இத்துறையானது மருத்துவ கல்வி, ஆயுஷ், மருந்து கட்டுப்பாடு என, பல தளங்களில் விரிவடைந்துள்ளபோதிலும் சார்பு செயலர் ஒருவரே கவனித்து வருகின்றார்.இதனால் பணி சுமை காரணமாக சுகாதார துறையின் பல்வேறு பணிகளும் காலதாமதம் ஏற்படுகிறது. அதையடுத்து சுகாதார துறையின் பணிகளை, இனி இரண்டு சார்பு செயலர்கள் கவனிப்பர் என அறிவித்து நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி உயர்கல்வி சார்பு செயலர் சவுமியா, தன்னுடைய பணிகளுடன் சுகாதார துறையின் மருத்துவ கல்வி, ஆயுஷ், உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு உணவு ஆய்வு உள்ளிட்ட துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார துறையின் மற்றொரு சார்பு செயலர் முருகேசன் சுகாதார துறையின் இதர பணிகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முருகேசன், சுகாதார சார்பு செயலர்-2, என்றும், சவுமியா, சார்பு செயலர்-2 என்று அழைக்கப்படுவர் என்று தெளிவுப்படுத்தியுள்ளது.இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்திருத்த துறையின் சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.கடந்த காலங்களில் கல்வித் துறையிலும் இதேபோன்ற பணிசுமை ஏற்பட்டது. பள்ளி கல்வித் துறை, உயர்கல்வி துறை பிரிக்காத பணிசுமை அதிகரித்தது. அப்போதும் இரண்டு சார்பு செயலர்களை நியமித்து பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை