| ADDED : ஜூலை 12, 2024 05:35 AM
புதுச்சேரி: மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில், கறவை மாடுகள் வைத்திருப்போருக்கு இலவச கறவை இயந்திரம் வழங்கும் திட்டத்தில், மணவெளி தொகுதியைச் சேர்ந்த 15 பேருக்கு, தலா 58 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8.70 லட்சம் மதிப்பில், பால் கறவை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கலப்பு திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தில், அதே தொகுதியைச் சேர்ந்த, 9 பேருக்கு தலா, 1 லட்சம் என, மொத்தம் ரூ.9 லட்சம் மதிப்பில் அரசாணைகள் வழங்கப்பட்டன.தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில், நலத்திட்ட உதவிகளை, சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் மேரி, சாந்தி, பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் ராமு, பொதுச் செயலாளர் சக்தி பாலன், மாவட்ட தலைவர் சுகுமார், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.