உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு துப்புரவு முகாம் துண்டு பிரசுரம் வழங்கல்

சிறப்பு துப்புரவு முகாம் துண்டு பிரசுரம் வழங்கல்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், கரியமாணிக்கம் கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்து, பொதுமக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஹெச். ஆர். ஸ்கொயர் நிறுவனத்தினர் வீடுகளுக்கு வரும் போது, குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதுதொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடைகள் மற்றும் பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினர். பின்னர், சாலையோர குப்பைகளை ஊழியர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை