உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவிகளுக்கு தினமலர்- பட்டம் இதழ் வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு தினமலர்- பட்டம் இதழ் வழங்கல்

வில்லியனுார்: வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் எதிர்க்கட்சி தலைவர் சிவா நேற்று வழங்கினார்.மாணவ மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தினமலர் - பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.வில்லியனுார் தென்கோபுர வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவியர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பஞ்சாயத்தம்மாள் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சரவணன், சங்கர்தேவி, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவர் சிவா மாணவியர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் மணிகண்டன், சபரிநாதன், முருகேசன், பவித்ரன், தியாகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை