புதுச்சேரி: பராமரிப்பு பணி காரணமாக வரும் 24ம் தேதி சாரம் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.இதுகுறித்து புதுச்சேரி பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் செய்தி குறிப்பு:புதுச்சேரி குடிநீர் உட் கோட்டம் வடக்கு பிரிவுக்குட்பட்ட சாரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், வரும் 24ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாரம் பகுதியில் குடிநீர் விநியோகம் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, சாரம், தென்றல் நகர், வெங்கடேஷ்வரா நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர், அன்னை தெரசா நகர், சின்னயம்பேட்டை, வேலன் நகர், லட்சுமி நகர், மகாத்மா நகர், சுந்தரமூர்த்தி நகர், திருமுடி சேதுராமன் நகர், அண்ணாமலை நகர், அய்யப்பன் நகர், வினோபா நகர், ஞானப்பிரகாசம் நகர், ஆனந்தரங்கப்பிள்ளை நகர், மடுவுப்பட்டை கைலாஷ் நகர், அண்ணல் காந்தி நகர், பழனிராஜா உடையார் தோட்டம், கிருஷ்ணா நகர் மேற்கு, ஜீவா நகர், பிருந்தாவனம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.