உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா

தேர்தல் விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா

பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலை பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில், நடந்த விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.தமிழ் விரிவுரையாளர் பரமேஸ்வரி வரவேற்றார்.தலைமையாசிரியர் வாணி, விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் வெற்றிவேல், மரக்கன்றுகள் நடுவதன் மூலம் புவி வெப்பமடைதலைத் தடுப்பது குறித்து விளக்கினார்.சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி அரசு வேளாண்துறை இணை இயக்குநர் சிவபெருமாள், துணை இயக்குநர் குமரவேல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும்' என்றனர்.ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட முதன்மைத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ