உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏம்பலம் காங்., பிரமுகர் மோகன்தாஸ் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

ஏம்பலம் காங்., பிரமுகர் மோகன்தாஸ் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு

பாகூர்: புதுச்சேரி காங்., வேட்பாளர்வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக, ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் மோகன்தாஸ், தொகுதிக்குட்பட்ட கிராமங்களில்' கை' சின்னத்திற்கு ஓட்டுகள்சேகரிக்கும் பணியை நேற்று துவங்கினார்.அவருக்கு, பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.முன்னதாக,காலை 7:00 மணிக்கு, ஆலடிமேடு, பனித்திட்டு கிராமங்களில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மோகன்தாஸ்,தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்வீடு வீடாக சென்று ஓட்டுகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.தெற்கு மாவட்ட காங்., தலைவர் குமரேஸ்வரன், துணை தலைவர் அசோகன், மாநில பொதுச் செயலாளர்இளையராஜா, மாநிலசெயலாளர்கள் கணிக்கண்ணன், பாலமுரளி,தி.மு.க., தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், கம்யூ., ஏகாம்பரம், வி.சி., ஆதவன், ஈழவேந்தன்,ஆம் ஆத்மி கணேசன்,தெற்கு மாவட்ட ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவர் பாஸ்கர்,இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சசிதரன்,தொகுதிதலைவர் மணிகண்டன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், தொகுதி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை