உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொகுதி பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தல்

தொகுதி பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தல்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள நீண்ட கால பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என, காங்., மாநில பொது செயலாளர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தியால்பேட்டை தொகுதியில் பல இடங்களில் கழிவு நீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தோடி துர்நாற்றம் வீசி வருகிறது. மழைக்காலங்களில் பல வீடுகளில் கழிவறை வழியாக கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. மழைக்காலம் நெருங்குவதால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.முத்தியால்பேட்டையில் அதிக உப்பு தன்மை கொண்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் அவதியடைகின்றனர். குடிநீர் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.சோலை நகரில் கடல் அரிப்பினை தடுக்க துாண்டில் முள் வளைவு திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. படகுகளை காப்பாற்ற மீனவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த மூன்று பிரச்னைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நந்தா சரவணன், வையாபுரி மணிகண்டன், தற்போதைய எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் ஆகியோர் ஏன், தீர்வு காணவில்லை. இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை