உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அலுலகம், புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி நடத்த உள்ளது.இதுகுறித்து, அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனர் சிவக்குமார் செய்தி குறிப்பு:வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழ் வாசகம் எழுதுதல் போட்டி நடத்தப்படுகின்றது.இந்த போட்டியில், வாக்காளர் கடமைகள், 100 சதவீதம் வாக்களிப்பு, நேர்மையான தேர்தல், தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலிகள், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் தேர்தலின் பங்கு, வாக்குச் சாவடியில் வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீட்டியில் இருந்தே வாக்களிப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி தமிழில் வாசகங்களை வாக்காளர்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.இதில், எதுகை, மோனை, சந்தம், போன்ற அம்சங்களுடன் ஓசை நயத்துடன் புதியதாகவும், புதுமையானதாவும் வாசகங்கள் இருக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், ஆகியவற்றுடன், அதிகபட்சமாக ஐந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, 9443308376 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வரும் 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.சிறந்த வாசகங்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் வழங்கப்படும். பரிசளிப்பு நிகழ்ச்சி 5ம் தேதி நடக்கிறது. இந்த வாசகங்களை வானொலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இவ்வாறு, செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை