| ADDED : மே 02, 2024 12:30 AM
திருக்கோவிலுார், : மெடிக்கலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவின்பேரில், திருக்கோவிலுார் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜவிநாயகம் குழுவினர் மற்றும் போலீசார் திருப்பாலபந்தல் கிராமத்தில் உள்ள மெடிக்கல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சித்தார்த் மெடிக்கலில், பரடாப்பட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா, 33; டாக்டருக்கு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து டாக்டர் ராஜவிநாயகம் அளித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்தனர்.