மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் இளமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தனத்துமேடு கிராம பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலையோரம் நின்றிந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அவர் ஒரு கத்தி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷ் கொண்டு சென்று தீவர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி,30; என தெரியவந்தது.இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, புண்ணியக்கோடி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago