மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி: கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்திற்கான மானிய தொகை குறைக்கப்பட்டதற்கு புதுச்சேரி விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.சங்க பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு பசு கறவை காலத்தில் மானிய விலையில் தீவனம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை மாற்றி, ஆண்டுக்கு 3 மாதத்திற்கு மட்டும் 75 சதவீத மானியத்தில் தீவன மூட்டை ரூ. 1080 விதம், 9 மூட்டைக்கான மானியம் பணமாக அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.தற்போது இந்த நிலையை மாற்றி, பொது பிரிவினருக்கு 52 சதவீதமாக குறைத்து ஒரு மூட்டை ரூ. 565 வீதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 92 சதவீதம் மானியம் வீதம் மூட்டைக்கு ரூ. 1080 என மாற்றி அறிவித்துள்ளனர்.பொது பிரிவினருக்கு ஜூன் மாதத்திற்கு 3 மூட்டை, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு 6 மூட்டைக்கான மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பால் உற்பத்தியாளர்களையும் ஏமாற்றும் செயல்.இத்திட்டத்தை புதுச்சேரி விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.பால் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு இத்தொழிலை செய்து வருகின்றனர். புதுச்சேரி அரசு பாகுபாடற்ற அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் மானியம் 92 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். அதுபோல் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago