உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை வரியை நீக்க வேண்டும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

குப்பை வரியை நீக்க வேண்டும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: குப்பை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.மானிய கோரிக்கையின்போது பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் இரண்டு கோடியை இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள நகராட்சி ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதற்கு முதல்வர் ஒரு கொள்கை முடிவு எடுத்து நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். சுற்றுலா என்ற போர்வையில் புற்றீசல் போல் நிறைய தங்கும் விடுதிகள் எந்தவித முறையான பார்க்கிங் மற்றும் தேவையான வசதிகள் இல்லாமல் உள்ளன அவற்றை கண்டறிந்து நகராட்சி முறைப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குப்பை வரியை நீக்க முதல்வர் உத்தரவிட்டார் அது இன்று வரை அரசாணையாக வெளியிடப்படவில்லை இதனால் ஒவ்வொரு முறையும் வீட்டு வரி கட்டுவோருக்கு குப்பை வரியும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசு ஒரு நடவடிக்கை எடுத்து குப்பை வரியை முற்றிலுமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதியில் முக்கியமாக தீர்க்க வேண்டிய பிரசனையாக உள்ளது பாதாள கழிவுநீர் பிரச்னை இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ