உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பொதுமருத்துவமனை ஆட்சி குழு கூட்டம்

அரசு பொதுமருத்துவமனை ஆட்சி குழு கூட்டம்

புதுச்சேரி: அரசு பொதுமருத்துவமனை ஆட்சி குழு கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தின் ஆறாவது ஆட்சிக் குழு கூட்டம்,மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஆட்சிமன்ற குழு ஒப்புதல் அளித்தனர். இக்கூட்டத்தில் சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு,மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள்,மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம்,பல்வேறு துறை தலைவர்கள்,அரசு சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை