உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரனையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த ஐ.டி.ஐ., ஊழியர் ரூபன்ராஜ் 23, எம்.பி.ஏ., பட்டதாரி ராகேஷ், 26; என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை