உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.2 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் கருவி தி.மு.க., இளைஞர் அணி வழங்கல்

ரூ.2 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் கருவி தி.மு.க., இளைஞர் அணி வழங்கல்

புதுச்சேரி: தி.மு.க., இளைஞர் அணி சார்பில், காது கேட்கும் கருவிகளை எதிர்கட்சித் தலைவர் சிவா வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புதுச்சேரி மாநில தி.மு.க., இளைஞர் அணி சார்பில், இலவச காது, மூக்கு, தொண்டை சிறப்பு முருத்துவ முகாம் தவளக்குப்பம் ஹெல்த் ஸ்ப்ரிங் மருத்துவமனையில் நடந்தது. முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். அதில் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 10 நபர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் நித்திஷ் தலைமை தாங்கினார். தி.மு.க., அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா முகாமில் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச காதுகேட்கும் கருவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், டாக்டர் சிரஞ்சீவி, மாநில துணை அமைப்பாளர் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், முகிலன், தாமரைக்கண்ணன், அகிலன், கிருபாசங்கர், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

nagendhiran
ஆக 14, 2024 05:58

யார்?கிட்ட ஆட்டையபோட்டது?


Mani . V
ஆக 14, 2024 04:50

பாட்டி என்ன கொடுத்தாங்க? நான் கோவிலுக்குப் போகிறேன். பாட்டி என்ன கொடுத்தாங்க? நான் இப்பத்தாம்பா சாப்பிட்டு விட்டு வருகிறேன். பாட்டி என்ன கொடுத்தாங்க? ஓ தள்ளி உட்காரணுமா? நாசமாப் போச்சு.


புதிய வீடியோ