உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பிரெஞ்சியர் காலத்து வெற்றியை பறை சாற்றும் செஞ்சி துாண்கள்

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பிரெஞ்சியர் காலத்து வெற்றியை பறை சாற்றும் செஞ்சி துாண்கள்

ந்தி சிலையை சுற்றிலும் நிற்கும் செஞ்சி துாண்கள் பிரெஞ்சியர் காலத்து வெற்றியை பறைசாற்றி நிற்கின்றன.புதுச்சேரி, கடற்கரை சாலை காந்தி சிலையை சுற்றிலும் 30 அடி உயரத்தில் எட்டு துாண்கள் பிரமாண்டாக உயர்ந்து நிற்கின்றன. அவை தான் செஞ்சி துாண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒரு வெற்றி சரித்திரம் புதைந்துள்ளது.புதுச்சேரி பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்சு ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டை கைப்பற்றினர். அப்போது, அங்கிருந்த கலை நயமிக்க சிலைகள், பிரமாண்ட துாண்கள் புதுச்சேரிக்கு நினைவு சின்னமாக கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்தவைதான் இந்த செஞ்சி துாண்கள். இன்றைக்கு காந்தி சிலையை சுற்றிலும் நின்று அழகு சேர்க்கின்றன.துாண்களில் கீழ் இருந்து மேலே செல்ல செல்ல மலர்கள், தெய்வ உருவங்கள், விலங்குகள், ஆடல் மகளிர், வீரர்கள் என்று பல சிற்ப வேலைகள் நுட்பமாக காணப்படுகிறது. துாணின் உச்சியில் தாமரை வடிவம் துாணிற்கு மேலும் அழகை கூட்டுகிறது.முதல் துாணில் கண்ணன் புல்லாங்குழல் வாசிக்க, அந்த இசையில் அனைவரும் மெய்மறந்து நிற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மற்றொரு துாணில் திருமால் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும் ஏந்திய நிலையில் காட்சியளிக்கிறார்.ஆக்ரோஷமான நரசிம்ம அவதாரம், ராமாவதார தோற்றம், பரத நாட்டியமாடும் மகளிர் சிற்பங்கள் என்று ஒவ்வொரு துாண்களுமே ரசனையுடன் செதுக்கி கற்பனைக்கு உலாவவிட்டுள்ளது. இவை அனைத்துமே விஜய நகர நாயக்கர் காலத்து கலைப்பாணியில் வடிமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள எட்டு துாண்களில் ஆறாவது துாணுக்கு கீழ் கல்வெட்டு செய்தி பளீச்சிடுகிறது. அதில் கடந்த 1864ம் வரும் அக்டோபர் மாதம் முசே போந்தோம் என்னும் கவர்னர் தலைமையில் முசே லெமெரேல் எனும் தலைமை பொறியாளர் முயற்சியில் புதுச்சேரி துறைமுகத்தை அழகுப்படுத்த இந்த துாண்களை பிரெஞ்சியர்கள் வைத்தனர்.இத்துாண்கள் காந்திசிலையை சுற்றிலும் கம்பீரமாக நின்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. செஞ்சி வெற்றிக்காக தான், செஞ்சி சாலை என்றும் பெயரித்துள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி