உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐகோர்ட் நீதிபதி மத்திய சிறையில் ஆய்வு

ஐகோர்ட் நீதிபதி மத்திய சிறையில் ஆய்வு

புதுச்சேரி, : காலாப்பட்டு மத்திய சிறையில் ஐகோர்ட் நீதிபதி ரமேஷ் நேற்று ஆய்வு செய்தார்.புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் கைதிகள் மூலம் மூலிகை மற்றும் பழத் தோட்டம் அமைப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, யோகா, நடனம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதுச்சேரியின் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ரமேஷ் நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் ஆய்வு செய்தார்.அவரை, கைதிகள் அங்கு விளையக்கூடிய பழங்களை வழங்கி வரவேற்றனர். பின், கைதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள், மூலிகை மற்றும் பழத் தோட்டங்களை நீதிபதி ரமேஷ் பார்வையிட்டார். பின்னர், கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி