உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், குப்பைகள் அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பார்வையிட்டு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். சிறப்பு துப்புரவு முகாம் மற்றும் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 15 நாட்கள் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக திருக்கனுார் பஜார் வீதியில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர், தினமும் கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சரியான முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என தனியார் நிறுவன ஊழியர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.தொடர்ந்து, திருக்கனுார் பஜார் வீதியில் இருந்த குப்பைகள் மற்றும் சாலை நடுவே தடுப்பு கட்டையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், திருக்கனுார் மற்றும் கே.ஆர்.பாளையம் கிராம தெருக்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை