| ADDED : ஏப் 22, 2024 05:24 AM
புதுச்சேரி: ஓய்வூதியதாரர்கள் வாழ்வாதார சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என, கணக்கு மற்றும் கருவூலத் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசின் கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2024ம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் மே மாதம் 2ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இச்சான்றிதழை நேரில் வந்தோ, முறைப்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி கள் அளித்த சான்றிதழ் மூலமாகவோ, இந்திய அரசின் ஜீவன் பிரமான் www.jeevapraman.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தபால் நிலைய அலுவலகத்தின் வாயிற் சேவையை பயன்படுத்தி அனுப்பி வைக்கலாம்.வாழ்வாதார உறுதி சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது. மேலும் விபரங்களுக்கு கணக்கு மற்றும் கருவூலத் துறையின் www.dat.py.gov.inஎன்ற இணையதளத்தின் பார்க்கவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.