உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகை திருட்டு போலீசார் விசாரணை

நகை திருட்டு போலீசார் விசாரணை

புதுச்சேரி : வீட்டின் கதவை திறந்து, பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகணேசன் மனைவி சாந்தி, 59; இவர் கூலி வேலை செய்து வருகிறார். கணவர் இறந்துவிட்டார். கடந்த 12ம் தேதி வழுதாவூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை சவரன் தங்க நகைகள் திருடி போயிருந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இதுகுறித்து, சாந்தி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ