| ADDED : ஜூன் 23, 2024 05:16 AM
வில்லியனுார்: மூலகுளம் ஜே.ஜே., நகரில் உள்ள அமிர்தா வித்யாலயாம் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் அரசு பொதுத் தேர்வு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவில் சுப்ரமணியம் ரெட்டியார் டிரஸ்டி சார்பில் அதன் தலைவர் முத்துராமன், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த அனிருத்துக்கு மடிகணினி, அடுத்த இரு இடங்களை பிடித்த மாணவியர் சங்கரி, சுஜித்தா மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் யாழினி, ஸ்ரீஹரினி மற்றும் நிவேதா ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ராஜசேகர், துணை முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.