உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆண்டியார்பாளையம் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

ஆண்டியார்பாளையம் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.அதை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், முதற்கால யாக சாலை பூஜை, 2ம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நாளை 9ம் தேதி காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 6:45 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7:45 மணிக்கு பரிவார விமானம், மூலவர் விமானம், ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அருகில் உள்ள மூலவர் முத்துமாரியம்மன் கோவிலில் 8:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை